மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நற்பலன் தரும் இனிய நாளாக இருக்கிறது. நீங்கள் எதை எடுத்தாலும் அதில் ஜெயம் நிச்சயம் உண்டாகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் நடக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்ப ஆதரவு உண்டாகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உடன்பிறந்தவர்களால் ஆதாயம் காணக்கூடிய யோகம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு புதுமை படைக்கும் நல்ல நாளாக இருக்கும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திடீர் யோகம் வரக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைக்கப் போகிறது.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுப்புகள் அதிகரிக்கக் கூடிய நாளாக இருக்கிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே விட்டுக் கொடுத்து செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் தன்னம்பிக்கையை அதிகரிப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் வேலையில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். பெற்றவர்களை மதித்து நடப்பது நல்லது. சுப பேச்சு வார்த்தைகளில் வெற்றி காணக்கூடிய யோகம் உண்டு. சுய தொழிலில் எதிர்பார்க்காத லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வாகன பயணங்களில் கவனம் வேண்டும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்து காட்டக்கூடிய யோகம் உண்டு. புதிய பொறுப்புகளை குடும்பத்தில் ஏற்க வேண்டி வரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சுறுசுறுப்பான நாளாக இருக்கப் போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சாதகமற்ற அமைப்பு என்பதால் சிலவற்றில் கால தாமதம் ஏற்படலாம்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நிதானம் கடைபிடிக்க வேண்டிய நாளாக இருக்கப் போகிறது. அவசரப்பட்டு எந்தவிதமான வார்த்தைகளையும் உதிர்த்து விடாதீர்கள். கணவன் மனைவிக்கிடையே நல்லுறவு வலுவாகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மனக்கட்டுப்பாடு தேவை.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிரடி மாற்றங்கள் உருவாகக்கூடிய நாளாக இருக்கப் போகிறது. புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்களின் எதிர்ப்புகள் வலுவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மகிழ்ச்சியுடன் காணக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. மனக்கவலைகள் அகன்று நிம்மதி பெருகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூல் ஆகும் வாய்ப்பு உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் அவசரப்படாமல் முடிவெடுப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும். சுய தொழிலில் உள்ளவர்கள் தன லாபம் காண வேகத்தை விட விவேகத்தை கடைபிடியுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் ஏற்க வேண்டி வரும், இதனால் டென்ஷன் ஏற்படலாம்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிந்தனை எதிர்மறையாக சிந்திக்க வாய்ப்புகள் உண்டு எனவே கூடுமானவரை கவனமுடன் இருந்து கொள்ளுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வசதி, வாய்ப்புகள் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் முக்கிய முடிவுகளை ஒத்தி வைப்பது நல்லது.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பல எதிர்ப்புகளைத் தாண்டி வெற்றி அடையக்கூடிய நல்ல வாய்ப்புகள் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு குறைந்த முதலீட்டில் அதிக லாபம் காணும் யோகம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு சகிப்புத்தன்மை தேவை.