மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நினைத்ததை நடத்தி காட்டும் உத்வேகம் பிறக்கும். குடும்ப ஒற்றுமையில் கண் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சுறுசுறுப்பு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன உறுதி தேவை.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீண்ட கால பிரச்சனை முடிவுக்கு வரக் கூடிய அமைப்பாக இருக்கிறது. குடும்ப சுமை அதிகரிக்கும். சுய தொழில் செய்பவர்கள் பல தரப்பட்ட மனிதர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பே உயர்வு தரும். ஆரோக்கியம் மேம்படும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமையப் போகிறது. பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சுயமரியாதை பாதிக்கப்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வேகத்தை காட்டிலும் வேகத்தை கடைபிடிப்பது நல்லது.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய திறமைகளை நிரூபிக்கக்கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். குடும்ப அமைதிக்கு விட்டுக் கொடுத்து செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கப் போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளினால் சில டென்ஷன் ஏற்படலாம்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சொந்த முடிவுகளுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். குடும்ப அமைதிக்கு ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்க புதிய யுத்திகளை மேற்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பயணங்கள் புதிய அனுபவங்களை கொடுக்கும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய பொறுமையை இழக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் தம்பதியர் இடையே சிறு சிறு வாக்குவாதங்கள் வந்து செல்லும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத நிகழ்வு ஒன்று நடக்கும். குடும்பத்தில்மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகா போட்டியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய குடும்ப பொறுப்புகளை சுமப்பதில் மகிழ்ச்சி கொள்வீர்கள். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும் சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சில இளைஞர்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்த கடனை வசூலிப்பதில் பிரச்சனைகள் வரலாம்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் பல தடைகளை தாண்டிய வெற்றி காண இருக்கிறீர்கள். கணவன் மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் வந்து மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மறைமுக பகைவர்கள் தொல்லை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையற்ற விமர்சனங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் நேர்மறையான கண்ணோட்டத்தில் அணுகுவீர்கள். உங்கள் சக்திக்கு மீறிய உழைப்பை கொடுத்து முன்னேற்றம் காண போகிறீர்கள். கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கப் போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளிடம் இணக்கம் உண்டாகும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய ஆசைகள் பூர்த்தியடைய கூடிய நல்ல நாளாக இருக்கிறது குடும்பத்தில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பயணங்களின் பொழுது கவனமுடன் இருப்பது நல்லது.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கணிப்பு பல இடங்களில் சரியாக அமையக்கூடும். உங்களை சுற்றி இருப்பவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு திடீர் திருப்பங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும்.