திருகோணமலை – முற்றவெளி விளையாட்டு மைதானத்திற்கு முன்னால் வியாழக்கிழமை ஆரம்பமான கவனயீர்ப்பு போரட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை 4வது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.
“ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வழியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரணியில் திரள்க ” எனும் தொணிப் பொருளின் கீழ் இந்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
இதன்போது போராட்ட இடத்திலுள்ள மரங்களில் தமது கோரிக்கைகளை போராட்டத்தில் ஈடுபட்டோர் காட்சிப்படுத்தியுள்ளதையும் காணமுடிந்தது.
இதில் இளைஞர்கள், சமூக அமைப்பின் பிரதிநிதிகள், பெண்கள் என பலரும் பங்குபற்றியிருந்தனர்.
இதனை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்தது.
வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ள இவ் கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள 8 மாவட்டங்களில் எதிர்வரும் 10 ஆம் திகதிவரை 06 நாட்களுக்கு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.