இலங்கையில் மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பது தொடர்பான இறுதி முடிவு நாளைய தினம் (09-01-2023) இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremsinghe) தலைமையில் இடம்பெற்ற கடந்த அமைச்சரவை கூட்டத்தில் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உள்ளிட்ட பல தரப்பினர் எதிர்ப்பை வெளியிட்டிருந்த பின்னணியில் இந்த யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.
இருப்பினும், அன்றைய தினம் மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை நாளை இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டம் வரை ஒத்திவைக்கப்பட்டது.