மடடக்களப்பு ஏறாவூரில் இன்று பகல் சவுக்கடி கடலுக்கு சென்ற உயர்தர மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் உயர்தர கலைப்பிரிவு மாணவனும் மாணவ தலைவனுமான தஸ்த்தகீர் அப்துல் றகுமான் என்பவரே உயிரிழந்துள்ளார்.
உறவினர்களுடன் கடலில் நீராடச் சென்ற வேளை மாணவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.
உயிரிழந்த மாணவர் அமைதியான சுபாவமும் நற்குணங்களையும் கொண்டவர எனவும் இம்முறை பரீட்சையை எதிர்கொள்ள காத்திருந்தவர என்றும் கூறப்படுகின்றது.