அங்குலான பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 3 பெண்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதன்படி, மூன்று பெண்களைத் தவிர மற்ற நால்வரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அங்குலான பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கவிட்டு தப்பிச் சென்ற நபரை செய்ய முற்பட்ட போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் கான்ஸ்டபிளை தாக்கிய நபரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் கான்ஸ்டபிள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதையடுத்து, அவர்களது உறவினர்கள் என கூறிக்கொள்ளும் குழுவினர் அங்குலான பொலிஸாரை முற்றுகையிட்டனர்.
அதன்படி, சந்தேகநபர்கள் இருவருடன் உறவினர்கள் குழு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேகநபர்கள் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜொண்டியா மற்றும் கலயா என்ற இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.