இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் தகனம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராய்ப்பூரிலே இச்சம்பவம் நடந்துள்ளது. உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த 72 வயதான லக்ஷ்மி பாய் என்ற பெண், மயங்கிய நிலையில் பீம்ராவ் அம்பேத்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் லஷ்மி பாய்க்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது மற்றும் அவரது உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை மருத்துவர்கள் சோதனை செய்துள்ளனர்.
பரிசோதனையில் லஷ்மிக்கு கொரோன இல்லை என தெரியவந்துள்ளது, அவரின் ECG உட்பட மற்ற உடல் உறுப்புகளில் எந்த செயல்பாடும் இல்லை என தெரியவந்துள்ளது.
இதன் விளைவாக லஷ்மி இருந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இதனையடுத்து, குடும்பத்தினர் லஷ்மியின் உடலை கோகுல் நகர் சுடுகாட்டிற்கு எடுத்து சென்றுள்ளனர்.
லஷ்மி உடல் வெப்பமாகவே இருந்ததால் குடும்பத்தினர் தகனம் செய்யாமல் காத்திருந்துள்ளனர். சத்தீஸ்கரில் கொரோனா பராமரிப்பு மையத்தில் பணியாற்ற வரும் லஷ்மியின் பேத்தி நிதிக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
உடனே மருத்துவரை அழைத்து லஷ்மியை சோதனை செய்ய வைத்துள்ளார், அப்போது லஷ்மிக்கு நாடி துடிப்பு இருந்ததை மருத்துவர் கண்டறிந்துள்ளார்.
ஆக்ஸிஜன் குறைவாக இருந்த லஷ்மி மீண்டும் சுடுகாட்டிலிருந்து மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
எனினும், துரதிஷ்டவசமாக மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸிலே அவர் உயிர்பிரிந்துள்ளது.
அலட்சியம் மற்றும் ECG சரியாக செய்யாததே தனது பாட்டியின் மரண்த்திற்கு காரணம் என நிதி குற்றம்சாட்டியுள்ளார்.