தெஹிவளை மிருகக்காட்சிசாலையை முதியோர்கள் இலவசமாக பார்வையிடுவதற்கு இன்று (24) வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
இதனை தேசிய விலங்கியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு நேற்றைய தினம் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டதாக அதன் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் மிருகக்காட்சிசாலையின் சுற்றுச்சூழல் கல்வி கண்காட்சியுடன் இணைந்து பள்ளி மாணவர்கள் மற்றும் முதியோர்கள் மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிடும் வாய்ப்பை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார் .