வெளிநாட்டு கடவுசீட்டு பெற்றுக்கொள்வதற்காக எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை மற்றும் நேரம் வழங்கப்பட்ட அனைத்து விண்ணப்பதாரிகளுக்கும் அன்றைதினம் கடவுச்சீட்டு வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கபப்ட்டுள்ளது.
அன்றையதினம் வழங்கபடவிருந்த கடவுச்சீட்டுக்கள் அந்த வாரத்தில் எஞ்சிய 4 தினங்களில் ஒரு தினம் மற்றும் நேரம் வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு நிர்வாக ஆணையாளர் ஹர்ஷ அலுக்பிடிய தெரிவித்துள்ளார்.
திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை
இதுதொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக , அந்த தினம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான காரியாலயம் மூடப்படுகின்றது.
வெளிநாட்டு கடவுச்சீட்டுபெற்றுக்கொள்வதற்காக காரியாலயத்துக்கு வருமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த விண்ணப்பதாரிகளுக்கு, வேறு தினம் ஒன்று வழங்கப்படும்.
அத்துடன் புதிய திகதி மற்றும் நேரம் விண்ணப்பதாரிகளுக்கு குறுஞ்செய்தி ஊடாக அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.