மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்ப்புகள் வலுவாக கூடிய அமைப்பாக இருக்கிறது எனவே கவனமுடன் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் உங்களை சுற்றி இருப்பவர்களை நீங்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதிக்க கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்கள் வெளியிடங்களில் கவனமுடன் இருப்பது நல்லது. எதிர்பாராத திடீர் இழப்பு ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு இறைவழிபாட்டின் மீது நம்பிக்கை அதிகரித்து காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளுங்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு என்பதால் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் எதிர்பாராத திடீர் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு கையில் பணம் புழங்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரக்கூடிய இனிய அமைப்பாக இருக்கிறது. சுயலாபம் காணக்கூடிய வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு சா ஊழியர்களின் மத்தியில் மதிப்பும், மரியாதையும் உயரும். ஆரோக்கியம் வலுப்பெறும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. வருவது வரட்டும் என்று விட்டு விடுவது நல்லது. கணவன் மனைவி உறவுக்கு நடுவில் அலட்சியம் தேவையில்லை. சுய தொழிலில் அதிக லாபம் காணக்கூடிய வாய்ப்பு உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இருந்து வந்த சுமை குறையும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத திடீர் திருப்பங்களை சந்திக்க இருக்கிறீர்கள். இடமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. சாதகமற்ற அமைப்பு என்பதால் கைக்கு கிடைத்தது வாய்ப்பு எட்டாமல் போக வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் மந்தநிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடினமான வேலையும் ஈசியாக இருக்கும். உடல் நலன் தேறும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கனவுகள் மெய் படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் ஒருவருக்குள் ஒருவருடன் இருந்து வந்த மனக்கசப்புகள் மறையும். சுய தொழிலில் நீங்கள் எதிர்பாராத லாபம் காணலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தீராத கடன் தொல்லையிலிருந்து மீள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உடல் நலனில் கவனம் வேண்டும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. நீங்கள் எதை செய்தாலும் அது இரட்டிப்பு லாபத்தை காணக் கூடிய வாய்ப்புகளை கொடுக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வீண் விரயங்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதால் சிக்கனத்தை மேற்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதையும் சிந்தித்து முடிவெடுங்கள். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வது நல்லது.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கை ஓங்கி இருக்கக்கூடிய இனிய அமைப்பாக இருந்து வருகிறது. குடும்பத்தில் உங்களுக்கு தனி மதிப்பு ஏற்படும். சுப காரியங்களில் ஏற்பட்டு வந்துள்ள தடைகள் நீங்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் எதிர்ப்புகள் விலகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பார்ப்பதை பூர்த்தி செய்வீர்கள். உடல் நலனில் கூடுதல் அக்கறை தேவை.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனதிற்கு பிடித்தவர்களுடன் மகிழ்ச்சியுடன் இருக்கக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சுறுசுறுப்புடன் செயல்படக்கூடிய வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் இழுப்பறியில் இருந்து வந்த வேலையும் சேர்த்து முடிக்க கூடிய வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்யக்கூடிய பொருளாதார ரீதியான சிறப்பு மிக்க பலன்கள் உண்டாக கூடிய நல்ல நாளாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வாகன ரீதியான வீண் விரயங்கள் வரலாம் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்கள் மத்தியில் திறமையை காட்டக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சொந்த முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். தேவையற்ற விமர்சனங்களை தவிர்ப்பது உத்தமம். கணவன் மனைவி இடையே இருந்து வந்த குழப்பங்கள் தீரும். சுய தொழிலில் உள்ளவர்கள் புதிய நபர்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இறந்த விஷயங்கள் கிடைக்க கூடிய வாய்ப்பு உண்டு. ஆரோக்கியம் வலுபெறும்.