முல்லைத்தீவில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டதாக மின்சார சபையினர் தெரிவித்துள்ளனர்.
இது மண்டோஸ் புயலின் தாக்கத்தாலே நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் முதன்மை வீதிகள் மற்றும் கிராமப்புற வீதிகளில் மரங்கள் முறிந்து மின் இணைப்பின் மீது விழுந்ததால் அதிகளவான இடங்களில் வயர்கள் அறுந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது இருக்கின்ற வளங்களை வைத்து மக்களுக்கு சீரான மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.