வரும் 5 ஆம் திகதி மற்றொரு சொகுசு கப்பலான MV Azamara Quest வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் அறிவித்துள்ளது.
Mein Schiff 5 இன் வருகைக்குப் பின்னர், MV Azamara Quest இந்த ஆண்டு ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் நிறுத்தப்படும் இரண்டாவது பயணக் கப்பலாக இது மாறும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை Mein Schiff 5 இல் இருந்து பயணிகள் கொழும்பு, யால தேசிய பூங்கா, உடவலவை வனவிலங்கு பூங்கா மற்றும் முல்கிரிகல வரலாற்றுப் பாறைக் கோவிலுக்குச் சென்றனர்.
மேலும் புந்தல தேசிய பூங்கா, ஹம்பாந்தோட்டை தாவரவியல் பூங்கா, காலி மற்றும் கதிர்காமம் ஆகியவை Mein Schiff 5 பயணிகளின் மத்தியில் பிரபலமான இடங்களாக இருந்ததாகவும் தெரிவிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது