திருத்தணியில் கஞ்சா வாங்க பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காய்கறி வியாபாரம் செய்து குடும்பத்தை பார்த்து வரும் பழனி என்பவரது மகனான கோகுல், மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையானவர்.
மது மற்றும் கஞ்சா வாங்க அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை தந்தை கடுமையாக கண்டித்துள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த பழனி, அங்கிருந்த கத்தியால் குத்திகோகுலை கொலை செய்துள்ளார். பின்னர் தானே நேரடியாகச் சென்று காவல் நிலையத்தில் அவர் சரணடைந்திருக்கிறார்.