இலங்கையின் அரசியலமைப்பிற்காக முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது திருத்தச் சட்டத்தை சர்வஜன வாக்கெடுப்பிற்கு உட்படுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
22ஆவது திருத்தச் சட்டம், மக்களின் இறையாண்மைக்கு நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்துவதால் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (22) நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக்கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுதல்
தற்போதைய அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள இந்த புதிய சட்டமூலம், மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் இறையாண்மையுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதால், இதனை நாடாளுமன்றத்தில் மட்டும் நிறைவேற்றுவது போதுமானதல்ல என கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, மக்களின் நேரடி ஒப்புதலைப் பெறுவதற்காக இந்தத் திருத்தத்தை சர்வஜன வாக்கெடுப்பிற்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

