நாட்டில் இந்த வருடத்தில் இதுவரை 1406 வாகனத் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வாகன திருட்டு சம்பவங்கள் வெகுவாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
முதல் மாதத்தில் 1116 மோட்டார் சைக்கிள் திருட்டு
வருடத்தின் முதல் மாதத்தில் 1116 மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்களும், 311 முச்சக்கர வண்டி திருட்டு சம்பவங்களும், 14 கார் திருட்டு சம்பவங்களும், 25 வேன் திருட்டு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இந்நிலையில் வாகனங்களின் உரிமையாளர்களின் கவனக்குறைவால் தான் பல திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.