மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத நன்மைகள் எல்லாம் நடக்க போகிறது. நெருங்கிய உறவுகள் உங்களைத் தேடி வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நினைத்தது நடக்கக்கூடிய அற்புதமான அமைப்பாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கைக்கு வருவதில் இடையூறுகள் ஏற்படலாம். ஆரோக்கிய கவனம் தேவை.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனக்கவலை அதிகரித்து காணப்படும். தேவையற்ற எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சவாலான வேலைகள் அமைய பெறும். போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு எனவே உங்களுடைய முயற்சியை கூடுதல் ஒத்துழைப்பு கொடுத்து அதிகரிப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிட்டும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் கிடைக்கின்ற வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்திக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நடக்கும். ஆரோக்கியத்தையும் கவனியுங்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வரும். மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நீங்கள் எடுக்கும் முடிவுகளில் இருந்து குழப்பம் இல்லாமல் இருப்பது நல்லது. விட்டு சென்ற உறவுகள் மீண்டும் உங்களை தேடும் வாய்ப்பு உண்டு. ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை கொள்ளுங்கள் அலட்சியம் வேண்டாம்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சிறு சிறு விஷயங்களிலும் உணர்ச்சிவசப்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்க துவங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வகையில் திடீர் மாற்றங்கள் நிகழும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த நிலை மாறும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சொந்த முயற்சிகள் பலிதமாகும். நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றியடைய கூடிய வாய்ப்புகள் உண்டு என்பதால் குழப்பம் வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்து அளவிற்கு லாபம் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மனக்குழப்பங்கள் நீங்கி நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் சிறு சிறு தடைகள் வந்து செல்லும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய துணிச்சலான முடிவுகள் மற்றவர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைய இருக்கிறது. தங்கு தடை இல்லாத பண வரவு இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகள் தொல்லை வலுவாகும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்குவதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதில் அனுகூலமான பலன்கள் உண்டு.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய விருப்பு வெறுப்புகளை மாற்றிக் கொள்வீர்கள். எவரையும் மட்டம் தட்டி பேசாமல் இருப்பது நல்லது. சமூகத்தின் மீதான அக்கறை அதிகரிக்க துவங்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேற கூடிய வாய்ப்புகள் உண்டு.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சமயோஜிதமாக முடிவெடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இடம், பொருள், ஏவல் பார்த்து செயல்பட வேண்டும். கணவன் மனைவி ஒற்றுமையில் குறைவிருக்காது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற கூடிய வாய்ப்புகள் உண்டு. கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஒரு சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்குவதில் தடைகள் வரலாம் கவனமுடன் இருப்பது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வகையில் லாபங்கள் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகா போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் பொறுப்புகளும் கூடும். குடும்ப உறவினர்களுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் மாறும் வாய்ப்புகள் கிடைக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உணர்வு பூர்வமாக சில முக்கிய முடிவுகளை எடுக்க வாய்ப்புகள் கிடைக்கும். எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வரலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தடைகளை தாண்டிய முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட காலம் இடுப்பறியில் இருந்த வேலைகளும் முடிவுக்கு வரும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சுய சிந்தனையுடன் உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த முயற்சி செய்வீர்கள். விமர்சனங்களை தாண்டிய வரவேற்பு இருக்கும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சமூகத்தின் மீது அக்கறை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை. வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.