கனவரல்ல EGK தோட்ட பிரிவில் தோட்ட தொழிற்சாலையில் கடமை புரிந்த 25 வயதுடைய அதே தோட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தோட்ட தொழிற்சாலை அதிகாரி ஒருவரின் குடியிருப்புக்கு நீர் குழாய் திருத்துவதற்காக சென்ற வேளை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
பின்னர் நீர்க்குழாய் திருத்தச் சென்ற நபர் மிக நீண்ட நேரமாகியும் வராததால் காவலாளி சென்று பார்த்த போது குறித்த நபர் மின்சாரம் தாக்கி கீழே கிடப்பதை அவதானித்துள்ளார்.
இதன்போது கூக்குரலிட்டு அயலவர்களை வரவழைத்ததன் பின்னர் உடன் நமுனுகுலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.