ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு சுமார் 6மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாக நிதி தேவைப்படும் எனதகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படுள்ளதால் முழுமையான தேவைகள் ஆக அதிகரிக்கும் என ஐநா அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
பல செயற்பாடுகள் அவசியம்
தீர்மானத்தின் 8 மற்றும் 19வது பத்திகளில் ஆணையை நிறைவேற்றுவதற்கு 2022 முதல் 2024 வரை பல செயற்பாடுகள் அவசியம் என குறிப்பிட்டுள்ள அந்த அதிகாரி , பெருமளவு வளங்களும் தேவைப்படும் எனவும் கூறியுள்ளார்.
மனித உரிமை ஆணைக்குழுவின் செயலாளர் ஹ_ய் லூவிற்கு அவர் இதனை தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் மனித உரிமை துஸ்பிரயோகங்கள்
தீர்மானத்தின் 8 வது பத்தி பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்காக இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் மனித உரிமை துஸ்பிரயோகங்கள் மற்றும் அது தொடர்பான குற்றங்கள் தொடர்பில் ஆதாரங்களை பாதுகாப்பது ஆய்விற்கு உட்படுத்துவதன் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கின்றது.
மேலும் 19 பத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தை இலங்கையில் மனித உரிமை நிலவரம் தொடர்பான தனது கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடலை அதிகரிக்க கோருகின்றமை குறிப்பிடத்தக்கது.