பெருந்தோட்டப் பகுதிகளில் வசிக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளியை கொண்டாடும் முகமாக சம்பந்தப்பட்ட தோட்ட நிர்வாகங்களினால் 5000 ரூபா முற்பண கொடுப்பணவுத் தொகை சில காலமாக வழங்கப்பட்டு வருகின்றது.
தற்போது நிலவும் பாரிய பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தொகை போதுமானதாக இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premedasa) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அரசின் தலையீட்டின் பேரில்,தீபாவளி பண்டிகையை கொண்டாடும் முகமாக, குறைந்தபட்சம்,15,000 ரூபாவேனும் முற்பணமாகக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நேற்று (04-10-2022) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விஷேட கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

