பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமியை துாக்கிச் செல்ல முயற்சித்த முகமூடி அணிந்த நபரிடமிருந்து பெண் ஒருவர் சிறுமியை காப்பாற்றிய சம்பவம் ஒன்று தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் இரத்தினபுரி பகுதியில் இடம்பெற்றிருப்பதாக இரத்தினபுரி பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்து மே;லும் தெரியவருகையில்,
புதரில் மறைந்திருந்த முகமூடி ஆசாமி
இரத்தினபுரி பாடசாலையொன்றில் கல்வி பயிலும் சிறுமி நேற்று பாடசாலையிலிருந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப் போது, புதரில் மறைந்திருந்த முகமூடி அணிந்த நபரொருவர், சிறுமி அணிந்திருந்த கழுத்துப் பட்டியால் கைகளை பின்னால் கட்டி சிறுமியை கடத்த முற்பட்டுள்ளார்.
இதன்போது அருகில் உள்ள தோட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த பெண் ஒருவர் தெய்வாதீனமாக அதனை கண்டு ஓடிச்சென்று சிறுமியைக் காப்பாற்றியுள்ளார்.
இது தொடர்பில் இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
அதேவேளை பட்டப்பகலில் சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.