சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஒரு கிலோகிராம் எடையுள்ள 08 தங்க பிஸ்கட்டுகளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து எடுத்துச் செல்ல முற்பட்ட விமான நிலைய சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இன்று (27) பிற்பகல் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களனி பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்