2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தின் சராசரி வரிச்சுமை 42 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
வரிச்சுமை
செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், நடத்தப்பட்ட ஆய்வின்படி ஒரு சராசரி குடும்பத்தின் வரிச்சுமை சுமார் 28,000 ரூபாவாகும்.
அரசாங்கம் பெருமளவிலான மறைமுக வரிகளை மக்கள் மீது சுமத்துவதால் இந்த நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.