திலீபன் வழியில் வருகிறோம் என்ற ஊர்தி பவனி சற்று முன்னர் முல்லைத்தீவு நகரை சென்றடைந்துள்ளது.
15.09.2022 அன்று பொத்துவில் பிரதேசத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஆரம்பித்த திலீபன் வழியில் வருகிறோம் என்ற ஊர்தி பவனி முல்லைத்தீவு நகரை வந்தடைந்தது.
முல்லைத்தீவு நகர் பகுதிக்கு வருகை தந்த ஊர்திக்கு முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த மக்கள் பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.