இலங்கைக்கு அவசர உதவியாக மேலதிகமாக 3.5 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க ஜப்பான் தீர்மானித்துள்ளது.
எனினும் , இந்தப் பணத்தை நேரடியாக அரசாங்கத்திடம் வழங்கவில்லை. அந்த நிதியை உலக உணவுத் திட்டம் (WFP), சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்கள் (IFRC) மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர்கள் நிதியம் (UNICEF) மூலம் வழங்கவுள்ளது.
முன்னதாக 3 மில்லியன் உதவி
முன்னதாக மே 20 ஆம் திகதி ஜப்பான் மனிதாபிமான உதவியாக 3 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கியிருந்தது.
அத்துடன், இதுவரையில் ஜப்பான் இலங்கைக்கு மனிதாபிமான உதவியாக 6.5 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கியுள்ளது