கிரிகெட் வீரர் வனிந்து ஹசரங்க காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பலம் பலப்படுத்தப்படும் என அணித் தலைவர் தசுன் சானக தெரிவித்துள்ளார்.
நேற்றைய போட்டியின் பின்னர் கிரிக்கட் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன் அடுத்த போட்டியிலும் வனிந்துவுக்கு பாரிய பொறுப்பு வழங்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
“நாங்கள் 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதால் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. ஆனால் பாகிஸ்தான் மிகச் சிறந்த அணி.” “குறிப்பாக நாம் நினைவுபடுத்த வேண்டும். பாகிஸ்தான் சென்ற போது அந்தப் போட்டியில் எங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றவர் வனிந்து ஹசரங்க.
அந்தப் போட்டியின் நாயகனும் அவரே.” “வனிந்து காரணமாக எமது பந்துவீச்சு பலம் மேலும் பலப்படுத்தப்படும் என நம்புகிறேன். எனவே, அடுத்த போட்டியிலும் வனிந்துவுக்கு அதிக பொறுப்பு வழங்கப்படுவதாகவும் தசுன் சானக தெரிவித்தார்.