புகையிரத திணைக்களம் பொதுமக்களின் கோரிக்கையை கருத்திற்கொண்டு பயணிகளுக்கு உயர்தர சேவையை வழங்கும் நோக்கத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புகையிரத இருக்கைகளை முன்பதிவு செய்வதற்கான 14 நாட்கள் என்ற கால எல்லை 30 நாட்களாக நீட்டிக்க தீர்மானம் மேற் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பிரதி ரயில்வே பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.
மேலும் இதன்படி எதிர்வரும் 13ஆம் திகதி காலை 10.00 மணி முதல் இக் கால நீடிப்பு அமுலாகும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்