பிலிப்பைன்ஸின் Cotabato நகரில் பரபரப்பான வீதியில் வியாழக்கிமை பிற்பகல் இலங்கை வர்த்தகர் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொல்லப்பட்டவர் மகுயிண்டனாவோவில் உள்ள Datu Odin Sinsuat நகரின் பரங்காய் செம்பாவில் வசிக்கும் இலங்கை நாட்டவரான Mohamed Rifard Mohamed Siddeek என அடையாளம் காணப்பட்டார்.
சித்தீக் தனது வெள்ளை மினி வேனில் இருந்து பாரங்கே போப்லாசியன் மதர் பகுதியில் உள்ள டான் ரூஃபினோ அலோன்சோ அவென்யூ வழியாக இறங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெற்று குண்டுகள் மீட்பு
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சிட்டி மெகா மார்க்கெட் அருகே சம்பவம் இடம்பெற்ற இடத்தில் காலிபர் 45 துப்பாக்கிக்கான வெற்று குண்டுகளை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
இந்நிலையில் சந்தேக நபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பிச் சென்றதாக சாட்சிகள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
உயிரிழந்த சித்தீக் பணம் கடன் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும், கடந்த ஆண்டு டத்து ஒடின் சின்சுவாட் நகரின் பரங்கே ப்ரோஸ் என்ற இடத்தில் துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.