மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உங்களுக்கு முன்னேற்றத்தைக் கொடுக்கும் வகையில் இருக்கப் போகிறது.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தனிப்பட்ட முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையக்கூடும். தடைபட்ட காரியங்கள் மீண்டும் எடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை பெறுவீர்கள். வெளியிட பயணங்களில் கவனம் தேவை.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் விரும்பியதை சாதிக்கக் கூடிய நல்ல அமைப்பு உண்டு. புதிய தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத திடீர் நன்மைகள் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் எச்சரிக்கை தேவை. பண விஷயத்தில் ஏமாற்றம் அடைவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் விழிப்புணர்வு தேவை.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் வாய்ப்பு உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கை மேல் பலன் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆரோக்யம் சீராகும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான நல்ல பலன்கள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உடல் சோர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் கூடுதல் பொறுப்புகள் கொடுக்கப்படும். கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளுக்கு சமரசம் காண்பது நல்லது.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் நேர்மறையாக இருக்கும். நீங்கள் நினைத்ததை அடைவீர்கள். பொழுதுபோக்குகளில் ஈடுபடாமல் வேலையில் கூடுதல் அக்கறை கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத புதிய பொலிவு தென்படும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தகுதிக்கு ஏற்ப பலன்களையும் அனுபவிப்பீர்கள். செல்லும் இடமெல்லாம் உங்களுக்கு செல்வாக்கு உயரும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை நீடிக்கும். மற்றவர்கள் முன் விட்டுக் கொடுக்காமல் இருப்பது நல்லது. புதிய தொழில் துவங்குவதில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு சக போட்டியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய புதிய முயற்சிகளில் கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பார்ப்பது நடக்க இருக்கிறது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு நிதானம் தேவை. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த ஒரு செயலையும் செய்யாமல் இருப்பது நல்லது.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். புதிய தொழில் துவங்கும் எண்ணத்தில் உள்ளவர்களுக்கு சாதக பலன் உண்டு. கணவன் மனைவி உறவுக்குள் நடக்கும் சிறு சிறு சிக்கல்களை பெரிதாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்கள் பலவீனம் அறிந்து செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதற்கும் தற்பெருமை கொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மந்த நிலை காணப்படும். புதிய தொழில் துவங்கும் முன் யோசித்து முடிவெடுப்பது நல்லது. உத்யோகஸ்தர்களுக்கு வேலையில் கூடுதல் அக்கறை உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் அனுகூல பலன்கள் உண்டு.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை அடைய கூடிய வாய்ப்புகள் கிட்டும். புதிய தொழில் துவங்கும் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு சாதக பலன் உண்டு. கணவன் மனைவி உறவுக்குள் இருக்கும் பிரச்சனைகளை பெரிதாக்காமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்க கூடும் என்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நேர்மையுடன் நடந்து கொள்ளும் வாய்ப்புகள் அமையும். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.