அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கொழும்பில் இன்று (30) நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்ட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
அடக்குமுறைகள் நிறுத்தப்பட வேண்டுமெனவும் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்டோரை விடுவிக்க வேண்டும் என்றும் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் ஆர்ப்பாட்டப் பேரணியைக் கலைக்க பொலிஸாரால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்த்கது.