மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட வேறு ஒன்று சிறப்பாக கிடைக்க இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடமையில் நாட்டம் இல்லாமல் இருக்கும் பொறுப்புணர்வுடன் இருப்பது நல்லது
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்து காட்டும் யோகம் பெற போகிறீர்கள். கணவன் மனைவியிடையே புரிதல் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் புதிய அனுபவங்களை பெறப் போகிறீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்களுடைய மேலதிகாரிகளுடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட போகிறீர்கள். நீங்கள் எதிர்பார்த்த ஒன்று உங்கள் கைக்கு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தொலைதூர இடங்களில் இருந்து சில அதிர்ச்சி தரும் செய்திகள் வரலாம். உணவு கட்டுப்பாடு அவசியம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதில் சாதக பலன் உண்டாகும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் அமைதி நிலவ கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் உங்களுடைய கருத்துக்களை மற்றவர்களிடம் திணிக்க வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த தொகை கிடைப்பதில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். தேவையற்ற பொழுதுபோக்குகளை தவிர்ப்பது நல்லது.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய ஆன்மீக சிந்தனை அதிகரித்து காணப்படும். பக்தியில் நாட்டம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்களை எதிர்த்து சமாளிக்க முடியாது என்பதால் புத்தியை தீட்டுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய நண்பர்கள் மூலம் அனுகூல பலன் உண்டாகும். ஆரோக்கிய ரீதியான வீண் விரயங்கள் ஏற்படலாம் எச்சரிக்கை தேவை.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய எதிர்பாராத அணுகுமுறை மற்றவர்களை வியப்படைய செய்யும். இரக்க சுபாவம் உங்களுக்கு நற்பலன்களை கொடுக்கும். தடைபட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுயதொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கவன சிதறல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் விழிப்புணர்வு தேவை.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய சுய தேவையை பூர்த்தி செய்து கொள்ள முயற்சி செய்வீர்கள். உங்கள் மீதான அக்கறை அதிகரித்துக் கொள்வது நல்லது. அலட்சியம் ஆபத்தை உண்டாக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தங்கள் அனுபவ ரீதியான சவால்களை எதிர் கொள்ள வேண்டி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு கடமையில் கண்ணியம் தேவை.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் விரும்பிய விஷயத்தை அடைவதில் இடையூறுகள் ஏற்படலாம். எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சுற்றி இருப்பவர்களே எதிராக செயல்பட வாய்ப்புகள் உண்டு எனவே கவனம் தேவை.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தவறுகளை திருத்திக் கொள்ள முயற்சி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரித்து காணப்படும். எதிர்பார்த்த அளவிற்கு லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் இனிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரும் அற்புதமான அமைப்பாக இருக்கிறது. நடக்குமா? நடக்காதா? என்கிற ஒரு விஷயத்தில் சுப பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு செல்லும் இடமெல்லாம் மரியாதை அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளுடன் இணக்கம் தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நலம் தரும் இனிய நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் எதிர்பார்த்த ஒரு விஷயத்தில் சாதக பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நினைத்த அளவிற்கு லாபம் அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் வரலாம். ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளுங்கள்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். தொலைதூர இடங்களில் இருந்து நல்ல செய்திகள் பெறுவீர்கள். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் உங்களுக்கு சில மன கசப்புகள் வரலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காவிட்டாலு, மந்த நிலை இருக்காது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகமாகி சவால் நிறைந்ததாக இருக்கும்.