யாழ்ப்பாணம் – காரைநகரில் இருந்து மூளாய் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கணவருடன் சென்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்துள்ளார்.
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் பொன்னாலை பாலத்தில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காரைநகர் பாலத்தடியில் அவர்கள் பயணித்துக் கொண்டிருந்தவேளை அவர் திடீரென தவறி விழுந்து தரையில் தலை அடிபட்டு இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
காரைநகர் சிவகாமி அம்மன் கோயில் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய ஜெயந்தன் வேதப்பிரியா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.