உடுநுவர பூவெளிகட பிரதேசத்திலிருந்து கொள்கலன் வாகனம் (கென்டைனர்) ஒன்றில் கொழும்புக்கு கடத்தப்படவிருந்ததாகக் கூறப்பட்டு வந்துள்ளது.
இதனை தொடர்ந்து மனித பாவனைக்கு உதவாத 6,960 கிலோகிராம் கழிவுத் தேயிலைகளை கெலி ஓயா கொஸ்ஹின்ன பிரதேசத்தில் வைத்து கம்பளை பிராந்தியத்துக்கு பொறுப்பான விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்
கொள்கலன்கள் பறிமுதல்
நேற்று (22) அதிகாலை ஒரு மணியளவில் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவல் ஒன்றினையடுத்து மறைந்திருந்து குறித்த கழிவுத்தேயிலை கொள்கலனை கைப்பற்றியதோடு சந்தேகத்தின் பேரில் ஒருவரையும் கைது செய்துள்ளனர்
அதி சிறந்த தேயிலை என அடையாளப்படுத்தும் பைகளில் 60 கிலோகிராம் அடங்கிய 116 பொதிகள் குறித்த வாகனத்திலிருந்து படையினர் கைப்பற்றியுள்ளனர்
கைப்பற்றப்பட்ட கழிவுத் தேயியையும் கைது செய்த சந்தேக நபரையும் பேராதனை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.