வவுனியாவில் போக்குவரத்து நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்கும் முகமாக நகரின் பல பகுதிகளிலும் போக்குவரத்துவரத்து பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ரொசான் சந்திரசேகர அவர்களின் தலைமையில் மூன்று பொலிஸ் குழுக்கள் வைரவப்புளியங்குளம், புகையிரத நிலைய வீதி, ஹொரவப்பொத்தானை வீதி, கண்டி வீதி ஆகிய பகுதிகளில் திடீர் சோதனை நடவடிக்கையை நேற்று மேற்கொண்டனர்.
இதன் போது வீதி நடைமுறையினை பின்பற்றாதவர்கள், தலைக்கவசம் சீராக அணியாதவர்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்தியமை போன்ற பல்வேறு குற்றங்களுக்காக 3 சாரதிகளுக்கு எதிராக குற்றம் பதிவு செய்யப்பட்டு தண்டப்பணம் அறவிடப்பட்டது.