இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகின்றன. இதனால் மக்கள் எரிபொருள் பெற்றுக்கொள்ள பாரிய கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், எவ்வித வாடிக்கையாளரும் வரிசையின்றி எரிபொருளை பெற்றுக் கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்றை குளியாபிட்டிய தண்டகமுவ ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையம் முன்னெடுத்துள்ளது.
அந்ந நடைமுறை வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விண்ணப்பம் மூலம், வாடிக்கையாளர்கள் வரிசையில் நிற்காமல் எரிபொருளைப் பெறுவதற்கான திகதி மற்றும் நேரம் ஒதுக்கப்படுகிறது.
இந்த வசதியைப் பெற, தேசிய எரிபொருள் அட்டையில் பதிவு செய்து, QR குறியீட்டை வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.
மக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்டுவதால் வரிசையின்றி வாடிக்கையாளர்கள் எரிபொருள் பெறும் ஒரேயொரு எரிபொருள் நிரப்பு நிலையமாக இது மாறியுள்ளது.
சமகாலத்தில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக, எரிபெருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.