தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் குறைவடைந்திருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஜூலை மாதத்தில் சுமார் 43,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்கும் சுற்றுலா ஹோட்டல்களின் மின் பிறப்பாக்கிகள் உள்ளிட்ட பிற தேவைகளுக்கான எரிபொருளை வழங்கும் முறை தற்போது நடைமுறையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.