இலங்கையில் திடீரென ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கை இயற்கை சீற்றத்தாலும் பாதிப்பை சந்தித்து வருகிறது.
அதிக காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், பல இடங்களில் மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
கனமழையால் குடியிருப்புகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ள நிலையில், 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதுடன், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.