கொழும்பு வெள்ளவத்தை- டபிள்யு.ஏ.டி. சில்வா மாவத்தையிலுள்ள சிறுவர் காப்பகத்திலிருந்த சிறுமியொருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சிறுதி நேற்று (2)அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. தப்பியோடிய சிறுமி கடந்த 3 நாள்களுக்கு முன்னரே ரன்முத்துகல சிறுவர் காப்பகத்திலிருந்து வெள்ளவத்தை சிறுவர் காப்பகத்துக்கு அழைத்து வரப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தப்பியோடிய 15 வயதான குறித்த சிறுமி, தியகடுவ, மஹகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் கூறியுள்ளதுடன், மாயமான சிறுமியைத் தேடும் பணியை வெள்ளவத்தை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.