யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக ஆஸ்திரேலியா செல்லவிருந்த 12 பேர் பருத்தித்துறைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, மணற்காடு கடற்கரைக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் வைத்து இன்று அதிகாலை அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது பருத்தித்துறையைச் சேர்ந்த 8 ஆண்களும், 4 பெண்களுமே சட்டத்துக்குப் புறம்பாக வெளிநாடு செல்ல முற்பட்டனர் என்று குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வீட்டில் தங்க அனுமதித்த குற்றச்சாட்டில் வீட்டின் உரிமையாளரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்