ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை திருடிய நபரை வரும் ஓகஸ்ட் 05 வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 9ஆம் திகதி ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி கொடியை அங்கிருந்த கட்டிலில் மேற்போர்வையாக விரித்து போராட்டக்காரர் ஒருவர் அதன் மேல் படுத்திருந்தார்.
அது குறித்து சமூக வலைத்தளத்தில் காணொளி வெளியிடப்பட்டிருந்த நிலையில் அந்த வீடியோவுக்கு அமைய பொலிஸாரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
தொழிற்சங்க தலைவரான உதேனி களுதந்திரி என்பவரே சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சட்டவிரோதமாக ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்தமை மற்றும் ஜனாதிபதியின் கொடியை அவமதித்தமைக்காக அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்