நாடளாவிய ரீதியில் எரிபொருள் பாஸுக்கு எரிபொருள் நிரப்பப்படுகிறது.
QR Code அடிப்படையில், வாகன இறுதி இலக்கத்துக்கு எரிபொருள் வழங்கப்படுகிறது.
எரிபொருள் வரிசை நீண்டு கொண்டே செல்கின்றது.
இதனிடையே, எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர் ஆடி அமாவாசை விரதத்தை வீதியில் முடித்துக்கொண்ட சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது.
யாழ். பருத்தித்துறை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் இன்று இடம்பெற்றது.
எரிபொருள் பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருந்த ஒருவர் தமது விரதத்தை வீதியில் முடித்து கொண்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகிறது.