எதிர்வரும் முதலாம் திகதி முதல் பாடசாலை மாணவர்களுக்காக தனியார் பஸ்களை சேவையில் ஈடுபடுத்தி, புதிய பஸ் சேவையை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
தற்போது காணப்படும் போக்குவரத்து சிக்கல் மற்றும் பாடசாலை போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்துள்ளமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது அனைத்து பாடசாலைகளும் உள்ளடங்கும் வகையில் பாடசாலை ஆரம்பமாகும் நேரம் மற்றும் நிறைவடையும் நேரம் என்பனவற்றை கவனத்திற்கொண்டு இந்த புதிய பஸ் சேவை முன்னெடுக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.