ரணில் விக்ரமசிங்கவின் கீழ் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் பிரதமர் பதவியை ஏற்காது என அதன் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க நேற்று கொழும்பில் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சமகி மக்கள் கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி பதவி உள்ளிட்ட எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.