சிகிரியா பிரதேசத்தில் உள்ள நீர்த்தேக்கத்தில் குளித்துக் கொண்டிருந்த 7 வயதுடைய பாடசாலைச் சிறுவன் முதலை தாக்கியதில் காணாமல் போயுள்ளார்.
குழந்தையைக் காப்பாற்ற அவரது தந்தை கடுமையாக முயற்சித்துள்ளார்,
இருப்பினும் அவரது முயற்சி தோல்வியடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் நேற்றைய தினம் (15-07-2022) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது