மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத நன்மைகள் நடைபெறும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் வெறுப்புகள் மறையும். சுப காரியம் முயற்சிகளில் சௌபாக்கியம் உண்டாகும். சுய தொழிலில் திடீர் திருப்பம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சாதகமற்ற அமைப்பு என்பதால் தேவையற்ற கடன்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றிவாகை சூடுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனைகள் படிப்படியாக மறையும் என்கிற தன்னம்பிக்கை வரும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் இருந்து அந்த இடையூறுகள் நீங்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்ததை சாதிக்கக் கூடிய அமைப்பாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிவு தேவை.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய பலன்கள் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. நீங்கள் சாதிக்க நினைத்ததை சாதித்து காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இறுக்கமாக இருந்த மனது தளர ஆரம்பிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் கணவன் மனைவி இடையே நீங்கள் தேவையற்ற பேச்சு வார்த்தைகளை தவிர்க்க வேண்டும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவியிடம் இருக்கும் அன்னோன்யம் கூடும். குடும்ப விஷயங்களை வெளியில் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் என்பதால் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறப்பான நாளாக அமைய இருக்கிறது. தொட்டதெல்லாம் துலங்கும் அற்புத வாய்ப்புகள் கிடைக்கும். இதுவரை தடையாக இருந்து வந்த கற்கள் விலகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகா போட்டியாளர்கள் மத்தியில் அங்கீகாரம் கிடைக்கும். சுவாச பிரச்சனைகள் வரலாம், ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் அமைதியாக இருப்பது நல்லது. சுமக்க நேரிடும் என்பதால் விழிப்புணர்வு தேவை. குடும்பத்தில் சுப காரிய பேச்சு வார்த்தைகள் நடக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும் என்பதால் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது நல்லது. ஆரோக்கிய குறைபாடுகளை உடனுக்குடன் கவனியுங்கள்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய துணிச்சலான முடிவுகள் மற்றவர்களுக்கு சாதகமாக அமைந்து விடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவியிடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தேவையற்ற முன்கோபம் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் எனவே கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலையில் கூடுதல் அக்கறை இருக்கும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் அறிவு பூர்வமாக சிந்திப்பது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மரியாதையும், மதிப்பும் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் ஒத்துழைப்பு நீடிக்கும். சுப காரியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் மேலும் வலுவாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. குடும்பத்தோடு வெளியிட பயணங்கள் மேற்கொள்வதற்கான திட்டமிடல் இருக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முயற்சிகள் பலிதம் ஆகும் நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளை வெளியில் பேசாமல் இருப்பது நல்லது. சுயதொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த வேலையில் தடைகள் இல்லாமல் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தீராத பழி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எச்சரிக்கை தேவை.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குறைகளை நீங்கள் நிவர்த்தி செய்து கொள்வது நல்லது. பலவீனம் அறிந்து செயல்படுவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்திக் கொடுக்க வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பக்தி பெருக்கெடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன நிறைவு இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் கவனம் தேவை.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகளை பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே புரிந்து கொள்ளும் தன்மை மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்கள் பண விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்றார், உறவினர்களின் ஆதரவு பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வழக்கு சாதகமாக அமையும். எந்த ஒரு விஷயத்திலும் குறுக்கு வழியை தேடாமல் நேர் வழியில் சிந்திப்பது நல்லது. கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்கிற ஆதங்கம் இருக்கும்.