மேல் மாகாணத்தின் சில பொலிஸ் பிரிவுகளுக்கு நேற்றிரவு 9 மணி முதல் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு உத்தரவு இன்று காலை 8 மணிக்கு தளர்த்தப்படுவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அதன்படி, நீர்க்கொழும்பு, களனி, கல்கிஸ்ஸ, நுகேகொட, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு மற்றும் மத்திய கொழும்பு ஆகிய பொலிஸ் பிரிவுகளில் அமுலில் உள்ள பொலிஸ் ஊரடங்கு இன்று காலை 8 மணிக்கு நீக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.