நாடாளுமன்றத்தில் ஊடகவியலாளர் அறையின் Wifi கட்டணம் செலுத்தப்படாததால் ஊடகவியலாளர்கள் தமது பணிகளைச் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து உடனடி தீர்வுகளை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்போது அவையில் இருந்த பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இலங்கை வங்குரோந்து அடைந்த நாடாகியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.