டீசல் ஏற்றிச் சென்ற பவுஸர் ஒன்று இன்று (02) அதிகாலை விபத்துக்குள்ளானது. இந்த விபத்து சம்பவம் ஹங்வெல்ல பூகொட வீதியில் கிரிதர நகருக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளான பவுஸரில் சுமார் 13,200 லீற்றர் டீசல் இருந்ததாக கூறப்படும் அதேவேளை விபத்தில் எரிபொருள் டாங்கிக்கு சேதம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.