மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய பலன்கள் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. நீங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு விஷயத்திலும் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி உறவுக்கு இடையே இருக்கும் சிறு சிறு சந்தேகங்களை நீக்குவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புது நம்பிக்கை பிறக்க இருக்கிறது.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை அடைவதில் இடையூறுகள் ஏற்படலாம் எனவே பொறுமை தேவை. சுய தொழிலில் உள்ளவர்கள் தேவையற்ற பொழுதுபோக்குகளை தவிர்த்து வேலையில் கவனம் கொள்வது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும். உத்தியோகஸ்தர்களுக்கு வெளியிட பயணங்கள் மூலம் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். தேவையற்ற எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் கவனம் தேவை. சுய தொழிலில் உள்ளவர்கள் சுய முடிவு எடுப்பது நல்லது. வேலை தேடுபவர்களுக்கு அதிர்ஷ்டமான நாளாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பாராட்டுக்கள் குவியும் அமைப்பு உண்டு.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திடீர் திருப்பங்கள் நிறைந்த நாளாக இருக்கிறது. நீங்கள் எதிர்பாராத விஷயங்களை எல்லாம் சந்திக்க இருக்கிறீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் எடுத்த முடிவிலிருந்து பின் வாங்காமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி உறவில் மேலும் சிக்கல் விழாமல் இருக்க பொறுமை காக்க வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வாயால் விபரீதம் ஏற்படும் மௌனம் காப்பது நல்லது.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் புதுமையை படைக்கக்கூடிய இனிய நாளாக இருக்கிறது. உற்றார் உறவினர்களுடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் தீரும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை நிலைக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த நபரை சந்திக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உழைப்பால் உயரலாம். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உடல் சோர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே கூடுமானவரை ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நடக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் அமைதி காத்தால் பல பிரச்சினைகளை சமாளிக்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வெற்றிக்கான வழி பிறக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. கணவன் மனைவி இடையே பரஸ்பர ஒற்றுமை நிலைக்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். சுய தொழிலில் இருப்பவர்கள் அதிரடி மாற்றங்கள் புரிய தயங்க வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் பிரச்சனைகள் தீர்ந்து பெருமூச்சு விடும் வாய்ப்பு உண்டு. ஆரோக்கியம் சீராகும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்த சுபயோக பலன்கள் உண்டாகும். மனதிற்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் வந்து மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சமூகத்தின் மீதான அக்கறை கூடும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய புதிய பாதையை நீங்கள் தீர்மானிக்க கூடிய அமைப்பாக இருக்கிறது. கணவன் மனைவி உறவுக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் மாறும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எவ்வளவு பணம் வந்தாலும், வந்த வழியில் சென்று விடும் எனவே விழிப்புணர்வு தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் சுமக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் உருவாகும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பல இடங்களில் இருந்து சுபயோக செய்திகள் காத்திருக்கிறது. கஷ்டப்பட்டு முடிக்க வேண்டிய வேலையை சுலபமாக முடித்து விடுவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தீட்டிய திட்டங்கள் தீட்டியபடி நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய சிந்தனைகள் உதிக்கும் இனிய நாளாக இருக்கிறது. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணலாம்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மிகப் பெரிய ஆசை ஒன்று நிறைவேற இருக்கிறது. எதிலும் வேகத்தை விட நிதானத்தை கடைபிடியுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பழைய சிக்கல்களில் இருந்து விமோசனம் கிடைக்கக்கூடிய அமைப்பாக இருக்கிறது. கணவன் மனைவி உறவிற்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கப்படும் பணிகள் விரைவாக முடிவடையும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் பொறுப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. கணவன் மனைவிக்குள் புரிதல் தேவை. தேவையான இடத்தில் நண்பர்களின் உதவிக்கரம் கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் பல வகைகளில் விமர்சனங்கள் இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அனுகூலம் நிறைந்த நாளாக இருக்கிறது. ஆரோக்கியம் மேம்படும்.