கொட்டகலை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கொட்டகலை, போகவத்தை மற்றும் பத்தனை பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்வதற்கான அட்டை இன்றைய தினம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலய மண்டபத்தில் இந்த அட்டை வழங்கப்படும் என கொட்டகலை பிரதேச சபை தெரிவித்துள்ளது.
குறித்த அட்டையை பெற்றுக் கொள்ள வருபவர்கள் மின்சார பட்டியல் மற்றும் தேசிய அடையாள அட்டையினை கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கொட்டகலை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கொட்டகலை, போகவத்தை மற்றும் பத்தனை பகுதிகளில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் தங்களது வதிவிடத்தை உறுதிப்படுத்தும் வகையில் கிராம உத்தியோகத்திரின் உறுதிப்பத்திரத்தை கொண்டு வருமாறு கொட்டகலை பிரதேச சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.