மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர் பார்க்கும் சில விஷயங்களில் கால தாமதம் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீர் லாபம் வரும். பிடித்த விஷயங்களை செய்து பார்ப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு தேவை என்பதால் இணக்கமாக செல்வது நல்லது.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தேவைகள் யாவும் பூர்த்தியாகும் கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மந்தநிலை மாறும் சுறுசுறுப்பு உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலையில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொறுப்புணர்வுடன் செயல்படுவது நல்லது.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை அடைவீர்கள். தடைபட்ட காரியங்கள் நடக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நற்பலன்கள் உண்டாகும். கணவன் மனைவி இடையே சிறு சிறு சண்டைகள் நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தொலைதூர போக்குவரத்து விஷயங்களில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு மேன்மை உண்டாகும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய திறமையை வெளிக்கொண்டு வரக்கூடிய வாய்ப்புகள் உருவாகும் இனிய நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளில் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க போகிறது.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சொந்த முடிவுகள் எடுப்பது சாதகமான பலனை கொடுக்கும். தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைப்பதை தவிர்க்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் உயரும். உத்தியோகஸ்தர்களுக்கு வம்பு வழக்குகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு கவனம் தேவை.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கனவுகள் நிறைவேற கூடிய இனிய நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் செய்யக்கூடிய காரியத்தில் மற்றவர்களுடைய தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பயணங்களின் மூலம் அனுகூல பலன்கள் கிடைக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய துணிச்சலான முடிவுகள் மற்றவர்களுக்கு பாடமாக அமையும். உங்கள் திறமையை விமர்சனங்களை தாண்டி வெளியில் கொண்டு வர முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அமைதி தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைத்ததில் இடையூறுகள் ஏற்படலாம்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வேகத்தை விட விவேகம் காப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் இருந்து வந்த தடைகள் அகலும். சுய முயற்சி வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்க செய்யும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முகத்தில் புன்னகை பூத்துக் குலுங்கும் இனிய நாளாக இருக்கிறது. தொலை தூர இடங்களிலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படும். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பு உண்டாகும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முன்கோபத்தால் தேவையற்ற பிரச்சனைகளை சந்திப்பீர்கள் எனவே நிதானம் காப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்ததை சாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு தன்னடக்கம் தேவை. ஆரோக்கியத்தின் மீது அக்கறை தேவை.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கப் போகிறது. சுய தொழிலில் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வரும். கணவன் மனைவி இடையே இருக்கும் நெருக்கம் குறையும் எனவே கவனம் தேவை. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் நன்மைகள் நடக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுபகாரிய முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் அகலும். மனதிலிருக்கும் குழப்பங்கள் நீங்கும். சுய தொழிலில் நீங்கள் எடுக்கக்கூடிய ஒவ்வொரு அடியிலும் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற கோபம் தேவையற்ற இழப்புகளை ஏற்படுத்தும் என்பதால் பொறுமையை கையாளுவது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.